மனப்பாறையை அடுத்த நடுகாட்டுப்பட்டியில் 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் சிக்கித் தவிப்பு;
மனப்பாறையை அடுத்த நடுகாட்டுப்பட்டியில் 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் சிக்கித் தவிப்பு
தொடர்ந்து 14 மணி நேரமாக விடிய விடிய மீட்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேசிய பேரிடர் மீட்பு விரைந்து வந்து கொண்டிருக்கிறது
போர்வெல் ரோபோ மூலம் குழந்தையின் கைகளை கயிற்றால் கட்டி தூக்கும் முயற்சி நடைபெறுகிறது
மூடப்பத கிணறு குழந்தை விழுந்த ஆழ்துளைக் கிணறு 4 ஆண்டுகளுக்கு முன்பு தோண்டப்பட்டது
விவசாய நிலத்தில் ஆந்துளைக் கிணற்றை தந்தை சரியாக மூடாததால் , மகன் விழுந்த துயரம்
வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது தவறி விழுந்ததாக தகவல்
இரண்டு வயது குழந்தையான சுஜித் வீட்டின் அருகே 30 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உள்ள நிலையில் தற்போது ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்டிருக்கும் குழந்தையை மீட்கும் பணியில் பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்
குழந்தையை மீட்க மதுரையை சார்ந்த மணிகண்டன் என்பவர் கண்டறிந்த கருவி பயன்படுத்தப்பட உள்ளது
குழந்தை 26அடி ஆழத்தில் சிக்கியுள்ளதால் , எளிதாக மீட்க முடியும் : தீயணைப்புத்துறை அதிகாரி
கிணற்றின் அருகே ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணிதீவிரம்
குழந்தையை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்